மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கேப்டன் மாற்றம் – இரண்டாக உடைந்த MI Team, ஹர்திக், ரோகித் ரசிகர்கள் மோதல்!
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேட் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ரோகித் சர்மாவிற்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா என்று பிளவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று நடந்த போட்டியிலும் இதனை காணமுடிந்தது.
ரோகித் சர்மா ரசிகர்கள் மீண்டும் அவர் தான் கேப்டனாக வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அகமதாபாத் மைதானத்தில் நடந்த 5ஆவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்த மும்பை அணியில் வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 6 ரன்களில் தோல்வியை தழுவினர். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Fight Between #ONEFAMILY
Hardik Pandya fans abused Rohit Sharma fans and they were fighting yesterday.
One bad decision of Mumbai Indians managment completely broken Mumbai Indians team and divided fans in parts. pic.twitter.com/ycXLTCnlNc— Satya Prakash (@Satya_Prakash08) March 25, 2024
குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய மோகித் சர்மா, ரஷீத் கான், சாய் கிஷோர் ஆகியோருக்கு புதிய கேப்டன் சுப்மன் கில் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு போட்டி மட்டுமே முடிந்துள்ளது. இன்னும், 13 போட்டிகள் இருக்கும் நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.