Kalanithi Maran Net worth: சன் குழும சாம்ராஜ்யத்தின் மன்னர்; கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா!!

சன் குழுமத்தின் தலைவரும், இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவருமான கலாநிதி மாறனின் வெற்றிக்கதை குறித்தும் சொத்து மதிப்பு குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய கோடீஸ்வர ஊடக அதிபரும், இந்தியாவில் அதிக வருமானம் பெறும் வணிக நிர்வாகிகளில் ஒருவருமான கலாநிதி மாறன் பற்றி நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரின் வெற்றிக்கதை குறித்தும் சொத்து மதிப்பு குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனுமான கலாநிதி மாறன் தென்னிந்தியாவின் ஊடக மன்னன் என்று அழைக்கப்படுகிறது. அவரின் தம்பி தயாநிதி மாறன் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் கலாநிதி, அரசியலில் இருந்து விலகி சன் குழுமத்தைத் தொடங்கினார்.

சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பிறகு, சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். ஸ்க்ரான்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். கலாநிதி மாறன் கர்நாடக மாநிலம் கூர்க்கைச் சேர்ந்த காவேரியை மணந்தார், அவருக்கு காவ்யா மாறன் என்ற மகள் உள்ளார்.

கலாநிதி மாறன் 1990-ம் ஆண்டு தமிழில் பூமாலை என்ற மாத இதழைத் தொடங்கினார். எனினும் இந்த பத்திரிக்கை அடுத்த 2 ஆண்டுகளிலேயே தனது தயாரிப்பை நிறுத்தியது. அப்போதுதான் சன் டிவி நிறுவப்பட்டது. 1993 இல் கலாநிதி மாறன் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே சன் டிவி பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

இதனால் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் டிவி சேனல்களை தொடங்கினார். இதை தொடர்ந்து சன் குழுமம் அசுர வளர்ச்சியை அடைந்தது. பங்கு மூலதனத்தின் 10 சதவீதத்திற்கு 133 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 1,100 கோடி ரூபாய்) திரட்டியது., 2006 ஆம் ஆண்டில் பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) அந்நிறுவனம் பட்டியலிடப்பட்டது..

2010 காலக்கட்டத்தில், கலாநிதி மாறன் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 33,168 கோடி ரூபாய்) மதிப்புடன் 17வது பணக்கார இந்தியரானார். கலாநிதி மாறனும் அவரின் மனைவி காவேரி கலாநிதி மாறனும் அதே ஆண்டு இந்திய நிர்வாகச் சம்பள அட்டவணையில் அதிக சம்பளம் வாங்கும் வணிக நிர்வாகிகளாக இடம் பெற்றனர்.

2014-2015ல் அவர்களது சம்பளப் பேக்கேஜ் 7.8 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 64 கோடி ரூபாய் வரை இருந்தது. ஃபோர்ப்ஸ் இதழ் கலாநிதி மாறனை “தென்னிந்தியாவின் தொலைக்காட்சி மன்னன்” என்று அறிவித்தது. தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், FM வானொலி நிலையங்கள், DTH சேவைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை கலாநிதி மாறம் வைத்திருக்கிறார்.

மேலும் அவர் 2010 முதல் 2015 வரை இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்தார். இவை அனைத்தும் மாறனின் நிகர மதிப்புக்கு பங்களிக்கின்றன. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, கலாநிதி மாறனின் நிகர மதிப்பு 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 23,633 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தியாவின் 77 வது பணக்காரர் ஆவார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) என்ற ஐபிஎல் அணி சன் குழுமத்திற்கு சொந்தமானது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிறுவனத்தின் இணை உரிமையாளராக காவ்யா இருக்கிறார். சன் குழுமம் 33 தொலைக்காட்சி சேனல்களுடன் சன் டிவி நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சூரியன் எஃப்எம் மற்றும் ரெட் எஃப்எம் உட்பட 48 எஃப்எம் ரேடியோ நிலையங்களையும் கொண்டுள்ளது. சுமங்கலி கேபிள் விஷன் (SCV) என்ற கேபிள் விநியோக வணிகத்தையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வாங்கியபோது, சென்னையைச் சேர்ந்த மீடியா மன்னர், விமானப் போக்குவரத்து வணிகத்தில் நுழைந்தார். அவர் 120 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 995 கோடி) வணிக ஒப்பந்தத்தில் செலவிட்டார், ஜனவரி 2015 இல் விமான நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும், இது அவரது சொத்துக்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சன் குழுமத்தில் உள்ள 35 சேனல்களும் இந்தியாவில் உள்ள 140 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களை சென்றடைகிறது

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *