Bengaluru Water Crisis : பெங்களூரு தண்ணீர் நெருக்கடி.. ஒர்க் ஃபிரம் ஹோம் கேட்கும் 15 லட்சம் ஐடி ஊழியர்கள்..
பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை மோசமாகி வரும் நிலையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஐடி நிறுவனங்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக அடிப்படையில் வீட்டில் இருந்து வேலை முறை வழங்கப்பட்டால், அது இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கின் மக்கள்தொகையைக் குறைக்க உதவும் மற்றும் தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூருவில் தினசரி 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை
பெங்களூரு ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. தண்ணீர் பற்றாக்குறையல் அத்தியாவசிய பணிகளுக்கே தண்ணீர் கிடைக்காததால் பெங்களூரு வாசிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த பல வாரங்களாகே இந்த சூழல் நீடிப்பதால், இந்த பிரச்சனை சரியாகும் வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
கர்நாடகா மற்றும் அசாம் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி, நீதிபதி கே.ஸ்ரீதர் ராவ், பெங்களூருவில் உள்ள சுமார் 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான குறுகிய கால தீர்வை பரிந்துரைத்தார். ஒரு வருடத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தால், சுமார் 10 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பலாம், இதனால் பெங்களூரு வளங்கள் மீதான சில அழுத்தங்கள் குறையும் என்று அவர் கூறினார்.
1980 களில், நகரத்தின் மக்கள் தொகை 25 முதல் 30 லட்சம் வரை இருந்தது, இப்போது அது 1.5 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். கர்நாடகா மாநிலம் 2003-04 மூன்று வருட வறட்சியை எதிர்கொண்டாலும், அந்த நேரத்தில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருந்ததால் அதன் தாக்கம் கடுமையாக உணரப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் ஏரிகளை தூர்வாருவது போன்ற நடவடிக்கைகளையும் அவர் பரிந்துரைத்தார்.
இதற்கிடையில், இணையத்தில் உள்ள பல பயனர்கள் நீதியரசர் ராவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டனர், வீட்டிலிருந்து வேலை செய்வதே சிறந்த வழி என்றும், இந்த நடவடிக்கை நீர் சேமிப்புக்கு தீவிரமாக பங்களிக்கும் என்று பயனர்களில் ஒருவர் கூறினார்.
இதனிடையே பெங்களூருவில் அத்தியாவசியமற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தியதற்காக நகரத்தில் மொத்தம் 22 குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 குடும்பங்களிடம் இருந்து 1.1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளது.
கார்கள், தோட்டம் மற்றும் பிற தவிர்க்கக்கூடிய நோக்கங்களுக்காக மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதற்கு தண்ணீரை பயன்படுத்தப்பட்டது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் அத்தியாவசியமற்ற முறையில் தண்ணீரை பயன்படுத்துவதால் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பெங்களூரு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது