புதிய விதியால் தப்பிச்சோம்.. தினேஷ் கார்த்திக்கை இப்படி பார்ப்பது மகிழ்ச்சி- RCB கேப்டன் டுபிளசிஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி தங்களுடைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளை பெற்றது. ஆர்சிபி அணி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கி விளையாடிய போது முக்கியமான கட்டத்தில் விராட் கோலி ஆட்டம் இழந்தார்.

எனினும் இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் விளாசி மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் டுபிளசிஸ், இது போன்ற போட்டிகளை சீசன் தொடக்கத்தில் விளையாடி வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என நினைக்கின்றேன்.

இறுதி கட்டத்தில் எங்களுடைய வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலி ஆட்டம் இழந்தவுடன் நாங்கள் தோற்று விடுவோம் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் என்ற விதி பேட்டிங் செய்யும் அணிக்கு கை கொடுக்கிறது. இந்த விதியின் காரணமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை வைத்து விளையாட முடிகிறது.

இதனை பயன்படுத்தி கடைசி ஓவர்களில் 12 அல்லது 15 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது சுலபமாகிவிட்டது. தினேஷ் கார்த்திக் இப்படி விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது. அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார் என்று நினைக்கின்றேன்.

ஒரு அணி வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பேட்டிங் வரிசையில் நம்பர் 7 மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் வீரர்கள் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் தினேஷ் கார்த்திக் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் நாங்கள் மினி ஏலத்தில் எங்களுடைய அணியின் முக்கியமான வீரர்கள் நீடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.

சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் இங்கு ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக செயல்படும். கோலி இரண்டு மாதம் ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருந்தாலும், அவர் அதே போல் தான் இருக்கிறார். அவருடைய இந்த ஓய்வு நிச்சயம் அவருக்கு நல்ல பையனை கொடுத்திருக்கும் என நினைக்கின்றேன் என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *