என்னை வச்சி தானே விளம்பரம் பண்றீங்க.. அஜித் அகாருக்கு விராட் கோலி மறைமுக குட்டு

ஐபில் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் விராட் கோலி தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு திரும்பிய விராட் கோலி, சிஎஸ்கே அணி எதிராக அதிரடியாக விளையாடத் தொடங்கி முக்கிய கட்டத்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

எனினும் பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தில் 49 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட விராட் கோலி விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தும் அதிரடியாக விளையாடி 77 ரன்களை சேர்த்தார்.

இதில் 11 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் விராட் கோலிக்கு இன்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆரஞ்சு நிற தொப்பியும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆடுகளும் தோய்வாக இருக்கும் என்பதால் விராட் கோலி இதில் விளையாடாமல் இருக்க வேண்டும் என செய்திகள் வெளியானது. விராட் கோலி தொடர்பான இந்த கருத்தை தேர்வு குழு தலைவர் ஆன அஜித் அகார்கர் தான் தெரிவித்து இருந்தார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதே சமயம் அமெரிக்காவில் டி20 போட்டிகள் நடைபெறுவதால் கிரிக்கெட்டில் பிரபலப்படுத்துவதற்காக விராட் கோலியின் புகைப்படத்தை வைத்தே ஐசிசி விளம்பரம் செய்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க விராட் கோலியை தூக்க வேண்டும் என்று பேச்சு அடிபடுவது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு திரும்பிய விராட் கோலி தற்போது தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று உத்வேகத்தில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு செய்தியாளரிடம் பேசிய விராட் கோலி,அஜித் அகார்கரை மறைமுகமாக சாடும் வகையில் பேசினார்.

அதில் டி20 உலக கோப்பை தொடரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த தற்போது என்னுடைய பெயர் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். அந்த வகையில் நான் இன்னும் டி20க்கு ஏற்ற வகையில் விளையாடுகிறேன் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தம்மை அணியில் இருந்து நீக்க சொன்ன நபர்களுக்கு விராட் கோலி மறைமுக பதிலை கொடுத்திருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *