இது தெரியுமா ? தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை தடவி வந்தால்…

சில பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருக்கும், இதற்கு ஊட்டச்சத்து குறைபாடும், உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகளின் பக்கவிளைகளும் ஒரு காரணம் ஆகும்.

கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன.

அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, ரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் ரத்த அணுக்களின் அளவும், ரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டுக்கு செல்லும் சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, நிறம் மங்கிவிடுகிறது.

எனவே இத்தகைய பிரச்னைகள் அனைத்தையும் தடுப்பதற்கு முதலில் சிகரெட் பிடிப்பதை தவிர்த்து, உதட்டின் கருமையைப் போக்கும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

தேன்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.

பாதாம் பால், எண்ணெய்

தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.

மாதுளை

மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

தயிர்

பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

வெண்ணெய்

கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.

கிளிசரின்

கிளிசரின் லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, கருமையை போக்கும்.

சர்க்கரை

உதட்டிற்கு ‘ஸ்கரப்’ செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை தற்காலிகமாக மறைக்கவும், நிரந்தரமாக போக்கவும் உதவும் ஒரு பொருள். அதற்கு தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *