படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை சமந்தா! நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிட்டாடல் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா மயங்கி விழுந்ததாக அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா
தமிழ் திரையுலகில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமகமானவர் தான் நடிகை சமந்தா. இதன் பி்ன்னர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முண்ணணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்து எராளமான ரசிகர் கூட்டத்தை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.

சமீபத்தில் நடித்த புஸ்பா படத்தில் இருந்து ஒரு அரியவகை நோயான ‘மயோசிட்டிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார் சமந்தா.

தற்போது அந்த நோயில் இருந்து மீண்ட சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகினார்.

இந்த நிலையில் அவரின் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பேசியுள்ளார்.

குஷி படத்தை முடித்துவிட்டு சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது படத்தில் நிறைய கடினமான காட்சிகளை நடிக்க வேண்டி இருந்ததால் மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்து விழுந்ததாக அவர் கூறினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *