தேளின் விஷம் ஒரு லிட்டர் ரூ.80 கோடி … என்ன காரணம்னு தெரியுமா?
விஷமுள்ள உயிரிகள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் தேளுக்கு அதில் தவிர்க்க முடியாத இடமுண்டு என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், தேளின் விஷம் கோடிகளில் விற்பனை செய்யப்படும் ஒரு விற்பனைப் பொருளாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் அது கோடிகளில் விற்பனை செய்யப்படுவதற்கு பின்னால் என்ன காரணங்கள் இருக்கின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம் ?
தேள் விஷத்தில் பல்வேறு மருத்துவ ரீதியான நன்மைகள் இருக்கிறது. குறிப்பிட்ட சில தேளின் விஷம் கொண்டு பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இதன் விளைவாக தோற்றியவையே தேள் வளர்ப்பு தொழில். ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் தேள் வளர்ப்பில் ஈடுபட்டுகின்றன.
குறிப்பிட்ட வகை தேளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தின் மூலம் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்குக்கு கூட மருந்து கண்டுப்பிடிக்க முடியும் என கூறப்படுகின்றது.
மேலும் , தேளின் விஷம் மூலம் நோய் எதிர்ப்பு மருத்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வலி நிவாரணி போன்றவை தயாரிக்கப்படுகிறது.
1 கிராம் தேளின் விஷம் இந்திய மதிப்பு படி ரூ.85 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் சுமார் 84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேள் வளர்ப்பு என்பது தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழில் என்பதால், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பண்ணை அமைத்து, தேள்களை வளர்க்கின்றனர்.
பண்ணையில் வளர்க்கப்படும் தேள்கள் இனப்பெருக்கத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து இந்த தொழிலை லாபகரமாக நடத்த முடிகின்றது.
துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் விஷம் எடுக்கப்படுகிறது.
தேள்களை பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்த பிறகு, சிறு துளி விஷத்தை அவை வெளியிடும் வரை ஆய்வக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.
பிறகு, அது உறைய வைத்து, பொடியாக்கி விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.