திடீரென திருமணம் முடித்த பிரபல நடிகை டாப்ஸி… கணவர் யார்னு தெரியுமா?

நடிகை டாப்ஸி தனது நீண்ட நாள் காதலரை தீடீர் திருமணம் செய்துக்கொண்டார். குறித்த விடயம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை டாப்ஸி
தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை டாப்ஸி தனக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார் என கூறினால் மிகையாகாது.

அதனை தொடர்ந்து வந்தான் வென்றான் ,வை ரா வை போன்ற வெற்றி படங்களில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர். தற்போது ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார்.

இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான மதியாஸ் போவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகிய வண்ணமே இருந்தது.

மேலும், இவர்களின் திருமணம் மார்ச் மாத இறுதியில், உதய்பூரில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி நடக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிரந்தது.’

இந் நிலையில், யாருக்கும் சொல்லாமல் , உதய்பூரில், மார்ச் 23 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை இருப்பினும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாத்திரம் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டாப்ஸியின் அபிமானிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறித்த விடயம் தற்போத வைரலாகி வருகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *