3 படத்தைப் போன்று அடிக்கடி வந்த கனவு… உயிரையே விட்ட இளம்பெண்
தனுஷ் நடித்த 3 படத்தினைப் போன்று 12ம் வகுப்பு மாணவிக்கு வந்த கனவு இறுதியில் உயிரையே பறித்துள்ளது.
மாணவிக்கு வந்த தற்கொலை கனவு
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி. கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகின்றார்.
இவரது 17 வயது மகள் அருகில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் அறையை சோதித்த போது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அக்கடிதத்தில் சமீப காலமாக அடிக்கடி தூக்கிட்டு கொல்வது போன்று கனவு வருவதால், என்னால் இயல்பாக இருக்க முடியவிலலை.
எனவே 3 படத்தில் வருவதை போல தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதியிருந்ததை பொலிசார் அவதானித்துள்ளனர். மேலும் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.