வறுமை நீங்கணுமா? இந்த சிலைகளில் ஒன்றை கட்டாயம் வீட்டில் வைங்க…

நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

குறிப்பிட்ட சில சிலைகள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வகையில் வறுமை போக்கவும் பணவரவை அதிகரிக்கவும் வீட்டில் எந்த சிலைகளை வைப்பது அதிர்ஷ்டம் கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆமை சிலை
ஆமை விஷ்ணுவின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வீட்டில் ஆமை சிலையை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.

வாஸ்து படி ஒரு உலோக ஆமையை வீட்டின் அறையின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் எல்லா விடங்களிலும் இலகுவில் வெற்றி கிடைக்கும். மேலும் இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

யானை சிலை
பழங்காலத்திலிருந்தே யானைகள் செல்வம் மற்றும் செழுமையின் அடையாளம் என நம்பப்படுகின்றது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி பித்தளை அல்லது வெள்ளி யானை சிலையை வீட்டில் வைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றவை அதிகரிப்பதுடன். நிதி செழிப்பையும் கொடுக்கும்.

அன்னப்பறவை சிலை (Swans Bird)
வாஸ்து படி வீட்டில் இரட்டை அன்னம் சிலை வைப்பதால் திருமணத்தில் இருக்கும் தடைகளை நீ்க்குவதற்கு பெரிதும் துணைப்புரியும்.

அன்னப்பறவை அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மேலும் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்பது ஐதீகம்.

கிளி சிலை
வாஸ்துபடி, கிளி அன்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. அது வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்யும்.

ஃபெங் சுய் படி, கிளி – பூமி, நெருப்பு, நீர், மரம் மற்றும் உலோகத்தை குறிக்கிறது. வீட்டில் கிளி சிலையை வைப்பதால், மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகரிக்கும்.

மீன் சிலை

வாஸ்து படி உலோக மீனை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது. இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். நிதி நிலைமை சிறக்கும். வீட்டில் மீன் சிலைகளை வைப்பது மன அழுத்தத்தை குறைப்பதுடன் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது

நந்தி அல்லது பசு சிலை

பசுவுக்கு சேவை செய்வது இந்து மதத்தில் கடமையாகவும் புண்ணியமாகவும் பார்க்கப்படுகின்றது. பசு இந்து மதத்தில் கோமாதா என்று வணங்கப்படுகிறது. இந்த சிலையை வீட்டில் வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சமே வராது என நம்பப்படுகின்றது.

ஒட்டகச் சிலை
வாஸ்து மற்றும் ஃபெங் சுய் படி, ஒட்டகம் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. எனவே, வீட்டில் ஒட்டகச் சிலை வைப்பதால் பணவரவு அதிகரிக்கும்.

நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் . மனம் தெளிவடையும் நல்ல எண்ணங்கள் உருவாக ஆரம்பிக்கும்.

குபேரன் சிலை

வீட்டில் அல்லது அலுவலகத்தில் சிரிக்கும் புத்தர் எனப்படும் குபேரன் சிலையை வைப்பதால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும்.

குபேரன் பணத்தின் கடவுளாக பார்க்கப்படுகின்றார். எனவே வறுமை நீங்கி பணவரவு அதிகரிக்க வீட்டில் குபேரன் சிலையை வைப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *