மேடையில் ராதிகாவிற்கு 63 வயது நடிகர் கொடுத்த முத்தம்! சரத்குமாரின் கோபமான ரியாக்ஷன்
நடிகை ராதிகா சரத்குமாரை 63 வயது நடிகர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள பழைய காட்சி தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
ராதிகா மற்றும் சரத்குமார்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவரான ராதிகா மற்றும் சரத்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ராதிகா அரசியலில் பல வருடங்களான இருந்து வரும் நிலையில், தற்போது வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
பொதுவாக ராதிகாவிற்கு அறிமுகம் என்பதே தேவையில்லை என்று தான் கூற வேண்டும். ஆம் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பயங்கர பிரபலமான நடிகையாக வலம்வருகின்றார்.
சரத்குமாரும் நடிகராக மட்டுமின்றி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்து வந்தார். தற்போது எதிர்பாராத விதமாக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துள்ளார்.
இருவரும் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் பயங்கர பிஸியில் இருந்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வின் காணொளி தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
ராதிகாவிற்கு அவரது கணவர் முழு ஆதரவு தெரிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர்களைப் பற்றின சிறு விஷயம் கூட தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
ராதிகாவிற்கு முத்தம் கொடுத்த நடிகர்
சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இருவரும் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு விருது வழங்கியுள்ளனர்.
அப்போது மேடைக்கு வந்த பாலகிருஷ்ணா சரத்குமாருக்கு கை மட்டும் கொடுத்துவிட்டு ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சரத்குமார் மைக்கை கொடுக்க மறுத்ததுடன், ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து விட்டு என்னை கட்டி பிடிக்கவில்லை என்று பாலகிருஷ்ணாவை கலாய்த்துள்ளார்.
அதன்பின்பு சிரித்தபடியே மன்னிப்பு கேட்டு சரத்குமாரை கட்டிப்பிடித்துள்ளார். இக்காட்சியை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று நடந்த பிரஸ் மீட்டிங்கில் சரத்குமார் சூரியவம்சம் திரைப்படத்தில் எப்படி நான் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அதுபோல என்னுடைய மனைவி ராதிகாவை எம்பி ஆக்குவேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.