சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி பொங்கும்
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நியாயத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக காலம் இருப்பதால் ராசிகளில் இவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து பெயர்ச்சிகளிலும் சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. ராசிகள் தவிர கிரகங்களில் நட்சத்திர மாற்றம், உதய அஸ்தமன நிலைகளில் மாற்றம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ராசி மாற்றத்தை போலவே நட்சத்திர மாற்றமும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இன்னும் சில நாட்களில் சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாக உள்ளார். சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். எனினும் சனி நட்சத்திர பெயர்ச்சியின் காரணமாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான காலத்தை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
சனி நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் பண வரவு அதிகமாகும். நிதிநிலை மேம்படும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் பெரிய நிதி ஆதாயத்தை பெறுவீர்கள். இதனால் உங்களது பொருளாதார நிலை மேம்படும். மாணவர்களுக்கு இது அனுகூலமான காலமாக இருக்கும்.
ரிஷபம் (Taurus)
ஜோதிட சாஸ்திரப்படி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும்.
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி பல விதங்களில் சுகமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். சனி பகவானின் அருளால் இவர்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடி அனைத்தும் நீங்கி பணவரவு அதிகமாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பணம் ஈட்டுவதற்கான பல வழிகள் பிறக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.