சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்..! மே 26-ல் சென்னையில் இறுதிப்போட்டி..!
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். நடைபெற்று வரும் சமயத்தில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. அதில் 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2-வது கட்ட போட்டிகள் ஏப்ரல் 8 தேதி முதல் மே 26-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 2-வது கட்டத்தின் முதல் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. லீக் போட்டிகள் மே 19-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன.
https://twitter.com/StarSportsIndia/status/1772231992186470855
பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் மே 21 தேதியும், எலிமினேட்டர் 22-ம் தேதியும் நடைபெற உள்ளது. குவாலிபயர் 2 மே 24-ம் தேதியும், இறுதிப்போட்டி மே 26-ம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.