இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.. வாழ்த்து சொன்ன தளபதி விஜய்..!

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வகுப்பு தேர்வு கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி இந்த தேர்வு முடிவடைகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *