தொடர்ந்து 4 நாட்கள் வங்கிக்கு விடுமுறையா ? உண்மை நிலவரம் இதோ..!

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை நாட்கள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்த வாரம் மார்ச் 29ஆம் தேதி அன்று புனித வெள்ளி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை, அதனை தொடர்ந்து மார்ச் 30 சனிக்கிழமை, மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு நிதியாண்டின் கணக்குகள் முடிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கப்படக்கூடிய நிலை உள்ளதால் பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்றும், அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி அன்று இறுதி ஆண்டு கணக்குகள் முடிக்கப்படுவதற்கான பணிகள் நடைபெறும். இதற்காக பணியாளர்கள் வங்கிக்கு வந்து பணியை மேற்கொள்வார்கள். ஆனால் பொது மக்களுக்கான சேவைகள் கிடைக்காது. ஆகவே இந்த நான்கு நாட்களும் பொதுமக்கள் வங்கி சேவையை பெற முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள்,சிறு, குறு வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் அத்தியாவசிய வங்கிப் பணிகளை இதற்கு முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை என தகவல் வெளியானது .

உண்மை என்னாவென்றால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடையாது.

புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை

மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 5-வது வாரம் என்பதால் வேலை நாள்

31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது.வங்கிகள் செயல்பட்டாலும், பரிவர்த்தனைகள் நடக்காது.

ஏப்ரல் 1-ந்தேதி வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது.

இதன் மூலம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்னும் செய்தி நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாரம் சனிக்கிழமை வேலை நாள் என்பதால் மக்கள் தங்களின் வாங்கி வேலைகளை செய்து கொள்ளலாம் அதன் பின் செவ்வாய்க்கிழமை தான் வங்கிகள் செயல்படும் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *