விரைவில் அலங்காநல்லூரில் மகளிர் ஜல்லிக்கட்டு போட்டி..?

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரையிலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பெண்கள் வளர்க்கும் காளைகள் போட்டிகளில் பங்கேற்ற போதிலும் பெண்கள் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி. கே. டி. பாலன் கூறியதாவது:அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்பு, அலங்காநல்லூர் அருகேயுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.இதற்காக தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெண் காவலர்கள், கபடி வீராங்கனை, கல்லூரி மாணவிகள் போன்ற பலதரப்பு மகளிரும் இப்போடிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களுக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, தகுந்த கவச உடைகள் வழங்குவதற்கான வடிவமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. மகளிர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆண்களுக்கு வழங்குவது போல் ஆகவே கார், பைக் மற்றும் விலை உயர்ந்த பரிசு பொருள்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக உயிருக்கு ஆபத்து மற்றும் காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *