இது தெரியுமா ? வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால்…
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் 1 சிட்டிகை உப்பு , 1-2 ரோஜாப்பூ இதழ்களையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். இப்படி 5 நிமிடங்கள் கொதித்ததும் அதை வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடியுங்கள்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும்
அவ்வாறு குடிப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் எளிதில் கிடைக்கிறது. நாள் முழுவதும் உங்களை சுருசுருப்புடன் வைத்துக்கொள்ள உதவுகிறது,மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் ஒரு நாளைக்கு இந்த மிளகு நீரை குடித்து வாருங்கள். இதனால் பிரச்னை தீரலாம். அதோடு குடலின் செயல்பாடுகளும் சீராக இயங்கும்.
வெயில் காலத்தில் உடல் நீர்ச்சத்து குறைவது அதிகரிக்கும். இதற்கு மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.இந்த தண்ணீர் உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை விரைவாக கரைக்க உதவும். அதோடு நீங்கள் அதிகம் சாப்பிடலாமல் இருக்கவும் , டயட்டின் போது உண்டாகும் உணவு நாட்டத்தை தவிர்க்கவும் உதவும்.
எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரை குடித்து வர எலும்புகளுக்கு ஆரோக்கியத்தையும் உறுதித் தன்மையும் கிடைக்கிறது.மிளகுத்துள் நீரானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கிறது. அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தையும் தடுக்க உதவுகிறது.
நீங்கள் அஜீரணத்தால் அவதிப்பட்டால், கருப்பு மிளகு நீர் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இது செரிமான நொதிகள் மற்றும் செரிமானத்திற்கு உதவும் திரவங்களுடன் தொடர்புகொள்வதாக அறியப்படுகிறது. இது கணைய நொதிகளில் ஒரு நன்மை விளைவைக் கொண்டிருக்கிறது, இதன் மூலம் முழு செரிமான செயல்முறையையும் மேம்படுத்துகிறது.
சூடான நீருடன் மிளகு சேர்த்து பருகுவது குடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். நீரிழப்பை தடுக்கவும் உதவும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவதற்கும் துணைபுரியும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் வழிவகுக்கும். நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் பிரச்சினை குறைந்து வருவதை உணரலாம்.உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதன் மூலம் வயிற்றுக்கும் இதமாக இருக்கும்.தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை பருக ஆரம்பித்தால் உடலில் ‘ஸ்டெமினா’ அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.ஏனென்றால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்துவிடும்.அதனால் உடல் ஆற்றலும் அதிகரிக்கும். கருப்பு மிளகு வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்கக்கூடியது.சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். கீல்வாதம், மூட்டு வலி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது நல்லது. அதேவேளையில் அதிகம் பருகினால் குடலில் எரிச்சல் ஏற்படக் கூடும்.