குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு தொல்லைகள் தீரும், நல்ல காலம் ஆரம்பமாகும்

அனைத்து கிரகங்களிலும் பெயர்ச்சிகள் ஏற்பட்டாலும் குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்களும் பொன்னான வாழ்க்கையும் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் இன்று அழைக்கப்படுகின்றன.

கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகங்களின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.

சுபமான கிராமமாக கருதப்படும் குரு பகவான் சுமார் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். மே 1 ஆம் தேதி அவர் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் சுபமான பெயர்ச்சியாக இருக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்

மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசியில் தான் குரு பெயர்ச்சியாக உள்ளார். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். பண வரவிற்க்கான புதிய வழிகள் உருவாகும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். இந்த காலத்தில் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இருந்த பிரச்சினைகள் விலகி ஓடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் கிடைக்கும். பதவி உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்களுக்கு நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்திலும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலவிதமான நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகமாகும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *