Acidity Problem: வாயுத்தொல்லையா? இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க!!
வாயுத்தொல்லை பலரை வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். இது இன்றைய நாட்களில் பரவலாக காணப்படுகின்றது. வயிற்றில் வாயு உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மோசமான தினசரி பழக்க வழக்கங்களும் அடங்கும். இது தவிர, ஜீரணிக்க கடினமாக இருக்கும் சில உணவுப் பொருட்களாலும் வயிற்றில் வாயு பிரச்சனை ஏற்படுகின்றாது. வாயுத்தொல்லை ஏற்படுவதால் வயிற்றில் வலி ஏற்படுவதை நாம் கேள்விபட்டுள்ளோம். ஆனால், சில நேரங்களில் வாயு வெளியெறவில்லை என்றால், அது மூளையையும் அடைவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.
செரிமான அமைப்பில் உள்ள வாயு செரிமானத்தின் இயல்பான செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஏப்பம் அல்லது ஃபார்ட்டிங் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் நீண்ட நாட்களாக வாயு பிரச்சனை இருந்தால் உடலில் பல நோய்கள் ஏற்படும். பலர் இந்த வாயுத்தொல்லை பிரச்சனையை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள். இது மலச்சிக்கல், எடை இழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி அல்லது குமட்டல் போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வயிற்றில் வாயு உருவாவதற்கான அறிகுறிகள்
வயிற்றில் வாயு உருவானால், அதற்கு பல அறிகுறிகள் தோன்றும். வாயு இருந்தால், வயிறு நிரம்பி இருப்பதான உணர்வு ஏற்படுகின்றது. அடிக்கடி ஏப்பம் வருவது, வயிற்றில் வலி, பிடிப்புகள் அல்லது கட்டி இருப்பது போன்ற உணர்வு ஆகியவை வாயு உருவாவதற்கான அறிகுறிகள் ஆகும். இது தவிர, வயிற்றில் அழுத்தம் அல்லது வீக்கம் போன்ற உணர்வும் வாயு உருவாக காரணமாகும். இந்த பிரச்சனையால் வயிறு சற்று விரிவடைய ஆரம்பிக்கிறது. வாயுத்தொல்லையால் வயிற்று வலியுடன், மலத்தில் இரத்தம், மலத்தின் நிற மாற்றம், எடை இழப்பு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி, மார்பு வலி போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.
வயிற்றில் வாயு உருவாக பொதுவான காரணங்கள்
பருப்பு வகைகள்
கொட்டைகள் மற்றும் பருப்புகளில் (Pulses) நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஜீரணிக்க கடினமானது. இது வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். பிற நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், வெள்ளரி, காலிஃபிளவர், பச்சை பட்டாணி மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் ஆகியவை அடங்கும். இது தவிர, வறுத்த உணவுகள் மற்றும் மாவு போன்றவற்றை உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் (Dairy Products) லாக்டோஸ் உள்ளது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒரு வகை சர்க்கரை ஆகும். சிலருக்கு லாக்டோஸ் ரெசிஸ்டன்ஸ் இருக்கும், அதாவது லாக்டோஸை ஜீரணிக்க தேவையான என்சைம்கள் இருக்காது. இது வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கார்பனேட்டட் பானங்கள்
கார்பனேட்டட் பானங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயு இருக்கின்றது. இது வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உடலுக்கு பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகையால் கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
செயற்கை இனிப்புகள்
சர்பிடால் மற்றும் சைலிட்டால் போன்ற செயற்கை இனிப்புகளை உட்கொள்வது வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதில் செயற்கை இனிப்புகள், அசெசல்பேம் பொட்டாசியம், அஸ்பார்டேம், நீமோட், சாக்கரின் மற்றும் சுக்ரலோஸ் ஆகியவை உள்ளன. இனிப்பை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கான சாத்தியக்கூறுகளையும் குறைக்கின்றது.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள் வயிற்று செயல்பாடுகளை மெதுவாக்குகின்றன. இது வாயு மற்றும் உப்பசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிக அளவில் அதிகரிக்கின்றன.
மதுபானம்
மது அருந்துவது உடல் நலத்திற்கு பல கேடுகளை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் எரியும் உணர்வு, வாயுத்தொல்லை மற்றும் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றாது.