குடும்பத்தோட ஜாலியா டூர் போகலாம்! கம்மி ரேட்ல விற்பனைக்கு வரப்போகும் மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்!
மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் என்ற எஸ்யூவி காரை தனது முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது மாருதி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இது ஒரு எலெக்ட்ரிக் எம்பிவி காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் பெருகி வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனமும் தற்போது எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இவிஎக்ஸ் என்ற எஸ்யூவி காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
ஏற்கனவே சர்வதேச அரங்கில் மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தத்தின்படி இரு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களையும் தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரை கொண்டு வரும்போது, அந்த கார் அறிமுகமான ஒரு சில மாதங்களில் அதே கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. மாருதி நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக எம்பிவி காரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த எம்பிவி காருக்கு ஒய்எம்சி என கோடு பெயர் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை தயாரிக்கும் பணியை தற்போது மாருதி நிறுவனம் துவங்கி உள்ளது.
ஏற்கனவே மாருதி நிறுவனம் தயாரித்து வரும் இவிஎக்ஸ் என்ற காரை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து வெளியிட உள்ள நிலையில், இந்த ஒய்எம்சி என்ற எம்பிவி காரையும் டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த கார் அறிமுகமானால் அதிலிருந்து 9 முதல் 12 மாதங்களுக்கு பிறகு டொயோட்டா நிறுவனம் இந்த காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா பிராண்டில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் ஒய்எம்சி என்ற கார் 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி நிறுவனத்தின் பிராண்டில் அறிமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் இது டொயோட்டா நிறுவனத்தின் பேட்ஜில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
மாருதி நிறுவனம் 2026-ம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தும் ஒய்எம்சி என்ற எம்பிவி காரை ஆண்டிற்க்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கார்கள் தயாரிக்கும் அளவிற்கு தனது திறனை வளர்த்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறது. இவிஎக்ஸ் மற்றும் ஒய்எம்சி ஆகிய இரு கார்களும் அந்நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும் அளவிற்கு தனது உற்பத்தி திறனை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
திட்டமிட்டபடி நடந்தால் 2027-28 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக மாருதி மாறும். இங்கு தயாரிக்கப்படும் கார்களை எல்லாம் இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது டாடா நிறுவனம் தான் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கிங்காக இருக்கிறது. இந்த இடத்தை விரைவில் மாருதி நிறுவனம் தட்டிப் பறிக்க திட்டமிட்டு வருகிறது.
தற்போது இந்தியர்கள் மத்தியில் குடும்பத்துடன் பயணிக்கும் எம்பிவி ரக கார் விற்பனைக்கு வருகிறது. இந்த கார்களில் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் வேண்டும் என்பதால் இதை அதிகமாக விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் மாருதி நிறுவனம் சிறியதாக கார்களை விட்டுவிட்டு குடும்பத்துடன் பயணிக்கும் காரை தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த முடிவு செய்துவிட்டது.