கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14000.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றம்

தமிழ்நாடு அரசு சார்ப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் 5 தவணைகளில் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தவணை முறையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் நலமுடன் குழந்தையை பெற்றெடுக்க, தமிழக அரசு சார்ப்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின்படி, கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்துக்குள் அரசு ஆரம்பர சுகாதார நிலையங்களில் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தில் பெண்களுக்கு மகப்பேறு காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னர் வரை தவணை முறையில் ரூ.14,000 பணமும், ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது.

முதலில் பதிவு செய்தவுடன் ரூ.2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதனைத்தொடர்ந்து, நான்காவது மாதத்தில் ரூ.2000 இரண்டாவது தவணையாகவும், பிரசவம் முடிந்தவுடன் ரூ.4000 மூன்றாவது தவணையாகவும், குழந்தைக்கு தடுப்பூசிப்போடும் காலத்தில் நான்காவது தவணையாக ரூ.4000 மற்றும் குழந்தைக்கு 9 மாதம் முடிந்த பின்னர் ஐந்தாவது தவணையாக ரூ.2000 என மொத்தம் ரூ.14,000 வங்கி கணக்கில் வர வைக்கப்படும்.

இதற்கிடையில், கர்ப்பக்காலத்தில் பெண்களின் உடல் திறனை மேம்படுத்த ரூ.2000 மதிப்புள்ள சத்து மாவு, இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மருத்துகள், உலர் பேரிச்சை, நெய், கதர் துண்டு போன்றவை 2 முறை வழங்கப்படும்.

தற்போது இந்த தவணை முறை திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவைக்கப்படவுள்ளது.

தற்போது இந்த தவணை முறை திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவைக்கப்படவுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *