ஒரே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக, அதிமுக மற்றும் பாஜக..! திமுக -1000 அதிமுக – 3000 பாஜக – 1500..!
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அடுத்தடுத்து வெளியாகின.
திமுக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை பெரும் வரவேற்பு பெற்ற திட்டமாகும். இந்த திட்டத்தை காப்பி அடித்ததாக அதிமுக அரசை விமர்சனம் செய்தனர். இல்லத்தரசிகளுக்கு மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் இதே திட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது நாங்க வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1000 இல்ல ரூ.1,500 உயர்த்தப்படும்.
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என மக்களை அச்சுறுத்துகிறார்கள். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று அறிவித்துவிட்டு தற்போது 30 சதவீதம் மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகையை வழங்குகிறது. பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அந்த 30 சதவீதம் பெண்களுக்கான உரிமைத் தொகையும் மொத்தமாக நிறுத்தப்படும். ஏனென்றால், திமுக மகளிர் உரிமைத் தொகையை வைத்து திமுக நாடகமாடுகிறது. உரிமைத் தொகை என்பது நீங்கள் கொண்டு வந்த திட்டம். அதனை நாங்கள் எப்படி நிறுத்த முடியும்? அது நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்றால் ஆயிரம் ரூபாய் அல்ல, ஆயிரத்து 500 ரூபாய் வழங்குகிறோம் என்றார்.