நவீன கணவன், மனைவியாக ஆர்ஜே விஜய், அருந்ததி நாயர் கலக்கும் ஒய்ஃப்!
ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ஆர்ஜே விஜய் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். டாணாக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சிவசங்கர் இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் டிசம்பர் 12, 2023 அன்று தொடங்கியது. இதன் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ஒய்ஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படம் குறித்துப் பேசிய ஹேமநாதன், “கணவன், மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம். அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். ஒய்ஃப் என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்ததாது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.