கைதி 2 எப்போது? – அதிகாரப்பூர்வ அப்டேட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜின் முதல் படம் ‘மாநகரம்’ வெளியான போது அவரை யாருக்கும் தெரியாது. அடுத்து கார்த்தியை வைத்து, கைதி எடுத்த போது, படம் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. காரணம், மாநகரம் படத்தின் வெற்றி. கைதிக்குப் பின் மாஸ்டர், விக்ரம், லியோ என்று லோகேஷ் கனகராஜ் மாஸ் படங்கள் இயக்கினாலும், மாநகரம், கைதி படங்களே அவரது மாஸ்டர் பீஸ்கள் என நம்புகிறார்கள். அதில், கைதி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜின் ஒவ்வொரு படம் முடியும் போதும், கைதி 2 படத்தின் பேச்சு எழும். இப்போது, லியோவை முடித்து, ரஜினியின் 171 வது படத்துக்கான ஸ்கிரிப்டை லோகேஷ் கனகராஜ் எழுதி வருகிறார். அத்துடன், ஸ்ருதியின் ‘இனிமேல்’ இசை ஆல்பத்தில் அவருடன் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவரும் லோகேஷ் கனகராஜிடம் ரஜினி படம், கைதி 2 உள்பட பல கேள்விகள் கேட்கப்பட்டன.

ரஜினி படத்துக்காக 4 முதல் 5 மாதங்களாக முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், ஜுனில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார். ரஜினி படத்தை முடித்த பின், ஒருமாத கால இடைவெளியில் கைதி 2 படத்தைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். ரஜினி படத்துக்கு முன்பே கைதி 2 படத்தின் கதை தயாராகிவிட்டதால், ரஜினி படம் முடிந்து ஒரு மாதகாலத்துக்குள் கைதி 2 படவேலைகளை தொடங்குவதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *