விஜய் கொடுத்த நிவாரண பொருளை வாங்காமல் சென்ற சிறுவன்!.. துரத்திக் கொண்டு ஓடிய புஸ்ஸி ஆனந்த்!..
திருநெல்வேலியில் நடிகர் விஜய் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கினார். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட இப்படியெல்லாம் செய்யவில்லை. ஆனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று ஏகப்பட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மேலும், மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாயும், வீடுகளை இழந்து தவித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி உள்ளார் விஜய்.
நடிகர் விஜய்யை பார்த்ததுமே நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் மொத்தமும் அந்த இடத்துக்கு படையெடுத்து வந்து விட்டனர். மெயின் கேட்டை எல்லாம் மூடி பக்காவான போலீஸ் பாதுகாப்புடன் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் வெள்ள நிவாரண விழா சிறப்பாகவே நடைபெற்றது.
நிகழ்ச்சியை சரியாக நடத்துவதற்காக புஸ்ஸி ஆனந்த் ஒரே ஆளாக அனைவரையும் மிரட்டி உருட்டி பேசிய பேச்சுக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டன.
விஜய்யின் ரசிகை ஒருவர் நிவாரண பொருள் வேண்டாம் என விஜய் காலில் விழுந்து வணங்கி செல்ஃபி மட்டும் எடுத்துக் கொண்டார். அதே போல இன்னொரு சிறுவனும் நிவாரணப் பொருள் வேண்டாம் செல்ஃபி மட்டும் போதும் என எடுத்த நிலையில், விஜய்யிடம் நிவாரணப் பொருள் வாங்காமல் சென்ற சிறுவனை துரத்திப் பிடித்து நிவாரணப் பொருளை வாங்க புஸ்ஸி ஆனந்த் ஓடிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜய்யின் புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபு அண்ணா GOAT படத்தை பார்த்து பண்ணுன்னா என கெஞ்சி வருகின்றனர்.