#BIG NEWS : செல்போன் கொண்டு வர அனுமதியில்லை..!
வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை விட தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்