T Rajendar: தூத்துக்குடியில் திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்! – என்னாச்சு தெரியுமா?
அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை வழங்கினார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எதிர்பாராத அளவிற்கு மழை இந்த மழையால், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்தது.அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை வழங்கினார்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சி புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரும் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூட்ட நெரிசலில் சிக்கினார்.
இதனால் அவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்து காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.