Thalapathy Vijay: செல்ஃபி செல்ஃபி… கடுப்பாகி நின்ற விஜய்.. நிவாரண பொருட்கள் வேண்டாம் என்ற பெண்! – நடந்தது என்ன?
செல்ஃபி எடுத்த பின்னர், அந்த பெண் நிவாரண பொருட்களை வாங்காமல் செல்ல, பொருட்கள் வேண்டாமா என்று விஜய் கேட்டார். அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று சொல்ல,விஜய் அந்த பெண்ணை போ…போ.. என்று சொன்னார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எதிர்பாராத அளவிற்கு மழை இந்த மழையால், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்தது.
அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை வழங்கினார்.
நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உள்ளே நுழையும் போதே நிர்வாகி ஒருவர் கதவை மூடியதில், கதவு விஜய் காலில் பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொருவராக விஜயிடம் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.