Mushroom Pepper Fry : காரசாரமான மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை! குளிருக்கு இதமானது!

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

வரமல்லி – அரை ஸ்பூன்

(ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து இதை நன்றாக பொரியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 1 (கீறியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

காளான் – 200 கிராம்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – கைப்பிடியளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும், அதில் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும்.

பின்னர் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும்.

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசம் போனவுடன், மஞ்சள் தூள், காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் நாம் தயார் செய்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மூடிவைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.

இதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்துக்கொள்ளலாம். அது முற்றிலும் உங்கள் விருப்பத்தின் பேரில் செய்யலாம்.

வெங்காயம் சேர்க்கும்போது உங்களுக்கு பிடிக்கும் என்றால், பொடியாக நறுக்கிய குடை மிளகாயும் சேர்த்து செய்யலாம். இது சிறிய விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு செய்யும்போது, அதிகமாக வரவேண்டும் என்றால், இதை சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் முற்றிலும் ஆப்ஷன்தான்.

இது அனைத்து வகை வெரைட்டி ரைஸ், சாம்பார், ரசம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதத்திற்கும், பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என டிபஃன் வெரைட்டிகளுக்கும் இதை தொட்டுகொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *