pepper Rasam : மணமணக்கும் மிளகு ரசம்! சளித்தொல்லை முற்றிலும் குணமாக தினமும் சாப்பிடலாம்!

சீரகம் – ஸ்பூன்

வரக்கொத்தமல்லி – அரை ஸ்பூன்

பூண்டு – 4 பல்

சின்னவெங்காயம் – 1

புளி – நெல்லிக்காய் அளவு

பழுத்த தக்காளி – 2

தாளிக்க

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வரகொத்தமல்லி போட்டு ஒன்றிரண்டாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், சிறிது கறிவேப்பிலை போட்டு மீண்டும் ஒரு முறை பல்ஸில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மையாக அரைக்கக்கூடாது. ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தக்காளியை கையால் நன்கு மசித்துக் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை 15 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். சூடான நீரில் புளிக்கரைத்துக்கொண்டால், புளி நன்றாக ஊறியிருக்கும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள ரசப்பொடி, புளித்தண்ணீர், மசித்த தக்காளி ஒரு டம்ளர் தண்ணீர் தேவையான அளவுக்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

இந்த ரசம் வந்து கொதி வரக்கூடாது கொதித்தால் நன்றாக இருக்காது.

கொதிக்கு முன்னர் நன்கு நுரைத்து வரும்போது மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான கம கமன்னு மணக்கும் மிளகு ரசம் ரெடி.

ரசப் பொடியை மிக்ஸியில் அரைக்காமல் உரலில் இடித்து வைத்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

சூடான சாதத்தில் இதை சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாய், அப்பளம் மட்டுமே போதுமானது. ஏதேனும் காய்கறிகளும் சமைத்துக்கொள்ளலாம். உருளைக்கிழங்கு வறுவலும் ஒரு நல்ல காம்போதான்.

மழை, பனிக்காலங்களில் சளித்தொல்லை ஏற்படாமல் இருக்க இதை தினமும் வைத்து சாப்பிடுவது நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *