பணத்துக்காக மார்கெட் லெவலையும் குறைத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்! அம்மணிக்கு என்ன கஷ்டமோ?
Actress Keerthy Suresh: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் , தெலுங்கு என பிறமொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் என முக்கியமான நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் தமிழ் படங்களில் நடிப்பது குறைந்திருக்கிறது. தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷுக்கு இது என்ன மாயம் என்ற படம் தான் முதன் முதலில் தமிழில் அறிமுகமான திரைப்படம். தேசிய விருது மட்டுமில்லாமல் ஏராளமான பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு ஹீரோயின் என்ற அடிப்படையிலேயே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், மகாநடி போன்ற படங்கள் கீர்த்தியின் நடிப்பை பறை சாற்றுவதாக அமைந்த படங்களாகும்.
தொடர்ந்து அந்த மாதிரி பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இதனால் சமுதாயத்தில் கீர்த்தி சுரேஷ் மீது ஒரு மரியாதை கூடியிருக்கிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திடீரென வெப் சீரிஸிலும் கால்பதிக்க உள்ளார்.
மக்கள் பார்வையில் மார்கெட் இழந்த நடிகர், நடிகைகள்தான் வெப் சீரிஸ் பக்கம் செல்வார்கள். ஆனால் நல்ல ஒரு பீக்கில் இருக்கும் போதே கீர்த்தி இப்படி வெப் சீரிஸ் பக்கம் போக என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் பணம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு பீக்கில் இருக்கும் நடிகையை சினிமாவில் கொடுப்பதை விட அதிக சம்பளம் கொடுத்து வெப் சீரிஸில் ஒப்பந்தம் செய்து விடுகின்றனர். அவர்களும் பணத்திற்காக சம்மதித்துவிடுகின்றனர். இப்படித்தான் கீர்த்தியும் ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளாராம்.