விஜயகாந்த் அப்பாவ கடைசில பாக்கலானு போனேன்! முடியல – ராவுத்தர் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். 150 படங்களில் நடித்து மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். ஏழைகளுக்கு இளவரசர், அனைவருக்குமான கேப்டனாகவும் இருந்தவர்.
ஆனால் இப்பேற்பட்ட புகழுக்குரிய அந்த மனிதர் இப்போது நம்மிடம் இல்லை எனும் போது வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர்.
விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்த போது அவருக்கு உற்ற துணையாக இருந்து எல்லாமுமாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர்தான். ஒரு கட்டத்தில் இப்ராஹிம் ஒரு பெரிய தயாரிப்பாளராக மாறியதும் விஜயகாந்தின் எல்லா விஷயங்களும் இப்ராஹிமை தாண்டி போகாது.
அந்தளவுக்கு விஜயகாந்துக்கு பக்கபலமாக இருந்தார். ராவுத்தர் பிலிம்ஸ் மூலம் விஜயகாந்த் பல படங்களில் நடித்திருக்கிறார். விஜயகாந்தின் வரவு செலவு கணக்குகளையும் ஒரு கட்டத்தில் ராவுத்தரே கவனிக்க ஆரம்பித்தார்.
அப்போது ராவுத்தரின் மகனிடம் விஜயகாந்த் ‘உன் அப்பன் எப்படி உன்னை வளர்த்திருப்பான் என்று எனக்கு தெரியும். அதனால் அவன் வார்த்தையை நீ காப்பாற்ற வேண்டும். அதையும் மீறி எதாவது வேண்டுமென்றால் என்னிடம் வந்து தயங்காமல் கேள்’ என்று கூறிவிட்டு வந்தாராம்.
அதே போல் ராவுத்தரும் அவர் இருக்கும் போது தன் மகனிடம் ‘விஜயகாந்தின் உழைப்பை பார். எந்தளவுக்கு கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருக்கிறான். அவனை மாதிரி ஒரு உழைப்பாளியை பார்க்கவே முடியாது. அதனால் அவன மாதிரி வர்றதுக்கு பார்’ என்று சொல்வாராம். ஆக இருவரும் ஒருவருக்கொருவர் அந்தளவுக்கு அன்பு பாராட்டி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த ராவுத்தர் மகன் சென்றாராம். அங்கு போனதும் மயக்கம் வருகிற மாதிரி இருந்ததாம். அதனால் உடனே கிளம்பிவிட்டாராம். சரி திரும்ப போகலாம் என நினைக்க அங்கு இருந்த கூட்டத்தில் நுழையவே முடியவில்லையாம்.
அதன் பின் திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்த பிறகு விஜயகாந்தை எப்படியாவது இன்னொரு முறை பார்த்துவிட வேண்டும் என எண்ணினாராம். ஆனால் அது நடக்கவே இல்லையாம். மிகுந்த மனவருத்தத்துடன் கூறினார் ராவுத்தரின் மகன்.