திரும்பி வந்துடாதேமா’.. தினேஷ் ரச்சிதா குறித்து விசித்ரா பேசிய கமெண்ட்! – கொத்தி கிழித்த கமல்!
பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் கிளைமாக்ஸை நெருங்கி இருக்கிறது. இன்றைய தினம் டபுள் எவிக்ஷன் இருப்பதாகவும், அதில் ரவீனாவும், நிக்சனும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விசித்ரா தினேஷின் பர்சனல் விஷயங்கள் குறித்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 89ம் நாள் எபிசோடில் ரவீனா விசித்ராவை பாத்திரம் கழுவித்தருமாறு கேட்டார். பேசிக்கொண்டிருந்தவளை தடுத்து, இதில் ஈடுபடுத்திய கோபத்தில், அவர் எல்லா வேலைகளையும் தன் மீதே சுமத்துவதாக பொரிந்து தள்ளினார்.
குறிப்பாக மணி, ரவீனா, தினேஷ் ஆகிய மூவரையும் பற்றி ‘இதுங்க மூஞ்சியெல்லாம் பார்க்கவே வெறுப்பா இருக்கு’ என்று பேசிய விசித்ரா, தினேஷின் மனைவி ரச்சிதா அவரை விட்டு போனதை குறிப்பிட்டு, தயசு செய்து ‘திரும்பி வந்துடாதேமா’ என்று கூறினார்.
தன்னுடைய மனைவி தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று தினேஷ் பல வருடங்களாக போராடி வரும் நிலையில், விசித்ரா இப்படி பேசியது கண்டனங்களை பெற்றது.