HTExclusive: ஒரு வாரத்திற்கு முன்னரே போடப்பட்ட ஸ்கெட்ச்; தவிர்க்கப்பட்ட அரசியல் பேச்சு; மண்டபத்திற்குள் நடந்தது என்ன?
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எதிர்பாராத அளவிற்கு பெய்த இந்த மழையால், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்தது.அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்வு பற்றி விஜய்க்கு மிகவும் நெருக்கமான ஒருவரிடம் பேசினேன்.
அவர் பேசும் போது, “தளபதி கொடுத்த நிவாரண பொருட்கள்ல 10 கிலோ அரிசி, வேட்டி,சேலை, துண்டு, ஒரு பை நிறைய காய்கறிகள், மசாலா சாமான்கள், ரவை அப்படின்னு கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல பயன்படுத்துற வகையில பொருட்கள் இருந்துச்சு.
வெள்ளத்துல வீடு சேதம் அடைஞ்சவங்களுக்கு, சேதத்தோடு அளவ பொருத்து 25 ஆயிரத்துலிருந்து 50, 60 ஆயிரம் வர நிவாரணத் தொகை வழங்கப்பட்டுச்சு.
அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
அவர் பேசும் போது, “தளபதி கொடுத்த நிவாரண பொருட்கள்ல 10 கிலோ அரிசி, வேட்டி,சேலை, துண்டு, ஒரு பை நிறைய காய்கறிகள், மசாலா சாமான்கள், ரவை அப்படின்னு கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல பயன்படுத்துற வகையில பொருட்கள் இருந்துச்சு.
வெள்ளத்துல வீடு சேதம் அடைஞ்சவங்களுக்கு, சேதத்தோடு அளவ பொருத்து 25 ஆயிரத்துலிருந்து 50, 60 ஆயிரம் வர நிவாரணத் தொகை வழங்கப்பட்டுச்சு.
இதற்காக மாநில பொறுப்பாளர் ஆனந்த் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடியே வெள்ளத்தால பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போயி ஆய்வு செஞ்சு, பட்டியல் போட்டு 1500 பேர தேர்வு செஞ்சாங்க.. அது தளபதி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுச்சு. அதுக்கப்புறம்தான் நிவாரணப் பொருட்கள் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுச்சு.
நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த 1500 பேருக்கும் காலைல பொங்கலும், மதியம் வடை, பாயசத்தோட சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துச்சு.
தளபதி விமானத்துல சரியா 11 மணிக்கு தூத்துக்குடி வந்தார். 11.30 மணிக்கு மண்டபத்துக்கு ரீச் ஆகணும்னு திட்டமிடப்பட்டுச்சு. ஆனா ட்ராபிக்காலையும், கட்டுக்கடங்காத கூட்டத்தாலையும் தளபதி மண்டபத்துக்குள்ள வரும்போது மணி 12:15 ஆயிடுச்சு.
அந்தக் கூட்டத்துல, தளபதி மண்டபத்துக்குள்ள நுழையும் போது ஒருத்தரோட கவனக்குறைவால, அவர் மேல கதவு லேசா பட்டுடுச்சு. ஆனா அதுல அவருக்கு எந்த அடியும் படல, எந்த காயமும் ஏற்படல. தளபதி அங்க வந்த உடனே அங்க இருந்த வயதான பாட்டி உட்பட எல்லாருமே தளபதி தளபதி அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க.
அத தொடர்ந்து, ஒவ்வொருத்தருக்கா நிவாரணப்பொருட்கள தளபதி கொடுக்க ஆரம்பிச்சாரு. எல்லாருமே நிவாரணப்பொருட்கள விஜய் கையால வாங்கணும், அவர் கூட செல்ஃபி, போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க.
முடிஞ்ச அளவுக்கு விஜய் அத நிறைவேத்திக் கொடுத்தாரு. ஒரு பாட்டி விஜய் யாருன்னு தெரியாம வேற ஒருத்தருக்கு வணக்கம் வச்சது, ஒரு பொண்ணு நிவாரண பொருட்கள் வேண்டாம்.. உங்க கூட செல்ஃபி எடுத்தா போதும் அப்படின்னு சொன்னது உள்ளிட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறுச்சு.