RCB கோப்பையை வெல்ல நீங்க ஹெல்ப் பண்ணலாமே? – ரசிகரின் கேள்விக்கு தோனியின் ரியாக்ஷன்

தூபாய் சென்ற தோனி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார். அவரிடம் ஐந்துமுறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் ஒருமுறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல நீங்கள் உதவலாமே என ரசிகர் ஒருவர் கேட்டார்.

அந்த கேள்விக்கு தோனி கூலாக பதில் அளித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய ரசிகர் ஒருவர், தான் 16 வருடங்களாக ஆர்சிபி ரசிகராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஆர்சிபி அணி ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், அதற்கு தோனி நீங்கள் உதவ வேண்டும் என கேட்டார்.

வீடியோவில் பேசும் ரசிகர், ” உங்களுடைய தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. ஆர்சிபி அணி இன்னும் ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. நீங்கள் ஆர்சிபி அணிக்கு வந்து ஒருமுறையாவது சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க வேண்டும்” என கேட்டார்.

அவரின் கேள்விக்கு பதில் அளித்த தோனி, “ஆர்சிபி அணி மிகச்சிறந்த அணி, என்னைப் பொறுத்தவரையில் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி தான் கவலையாக இருக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய தோனி, ஐபிஎல் தொடரில் இருக்கும் அனைத்து அணிகளுமே மிக சிறப்பான அணிகள் தான். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எல்லாமே திட்டமிட்டப்படி சரியாக நடைபெறாது. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறந்த வீரர்களை வைத்துள்ளது.

ஆனால், வீரர்கள் காயம் காரணமாக சரியான நேரத்தில் விளையாட முடியாமல் போவதால் பிரச்னை எழுகிறது. அணிக்குள் பிளேயர்கள் காம்பினேஷன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். அதேநேரத்தில் சென்னை அணியை விட்டு விலகி இன்னொரு அணி கோப்பையை வெல்வதற்கு உதவினால் சிஎஸ்கே ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்?” என சிரித்துக் கொண்டே கேட்டார். மேலும், இப்போது சிஎஸ்கே அணியைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய அணியில் கவலைப்படுதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் கூறினார். அவரின் இந்த பதிலைக் கேட்டு ரசிகர்கள் வியப்படைந்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *