எடை சல்லுனு குறையும்.. “இந்த 5 மேட்டரை மட்டும் செய்தால் போதும்..” ரொம்பவே ஈஸி.. கவலை வேண்டாம்

இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் வயதாகி மாண்டு போவது நிச்சயம் நடந்தே தீரும். வயதாகும் செயல்முறையை நம்மில் யாராலும் தடுக்கவே முடியாது. குறிப்பாக 30 வயதைத் தாண்டிய பிறகு நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.

எடை குறைப்பது என்பது பொதுவாகவே கடினமான ஒரு செயல்முறை. அதிலும் 30 வயதைத் தாண்டிய பிறகு அது மேலும் மேலும் கடினமான ஒன்றாக மாறுகிறது. 20களில் உள்ள நமது உடலுக்கும் 30களில் உள்ள நமது உடலுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. இதுவே எடை குறைப்பைக் கடினமான ஒன்றாக மாற்றுகிறது.உணவுப் பழக்கம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் கூட உடல் எடையைக் குறைப்பதில் உணவுப் பழக்கம் ரொம்வே முக்கியமானது. நாம் என்ன உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ.. அதைப் பொறுத்தே உடல் எடை குறையும். பல்வேறு வல்லுநர்களும் சொல்வது இதை தான். எனவே, 30 வயதைத் தாண்டிவிட்டால் நீங்கள் உங்கள் உணவு முறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் என்ன. எதைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

எடை குறைக்க டயர்ட் என்று நாம் அனைத்தையும் சாப்பிடாமல் விட்டுவிடக் கூடாது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நமக்குக் கட்டாயம் தேவை. எடை குறைப்பில் நார்ச்சத்து மற்றும் கால்சியம் ரொம்பவே முக்கியம், அதேநேரம் புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஒமேகா-3 போன்றவை சத்துக்களும் உடல் எடையைக் குறைக்கும் உணவில் முக்கியமானதுநார்ச்சத்து: எடை குறைக்க உங்கள் உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். அதிலும் 30 வயதைத் தாண்டினால் இது ரொம்பவே முக்கியமானது. வயதாகும்போது,நமது வளர்சிதை மாற்றம் இயற்கையாகவே குறைகிறது, மேலும் இது நமது செரிமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, எடை குறைக்க விரும்பினால்,

அதுவும் நீங்கள் 30 வயதைக் கடந்து இருந்தால் உங்கள் உணவு நார்ச்சத்துக்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். இது டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய பாதிப்பையும் கூட தடுக்கும்.பதப்படுத்தப்பட்ட உணவுகள்: அதேபோல பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும்.. 30 வயதைக் கடக்கும் போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. அவை உங்கள் இதய ஆரோக்கியத்தில் பாதிக்கும். மேலும், அது உடல் பருமனுக்குக் கூட வழிவகுக்கும்..

மேலும், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதும் உங்கள் செல்கள் முதுமை அடைவதை விரைவுபடுத்தும்.. எனவே, எடை குறைக்க முயன்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக ப்ரஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுங்கள். இதை எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்களை இளமையாகவும் வைத்திருக்கும்.

டயர்ட் முறை: அதேபோல 30 வயதைக் கடந்துவிட்டால் உங்களுக்கு எல்லா விதமான டயர்ட்டும் பலன் தராது. சில வகை டயர்ட் மூலம் நீங்கள் உடல் எடையை வேகமாகக் குறைத்திருக்கலாம். ஆனால், குறைத்த வேகத்திலேயே அது மீண்டும் அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது. எனவே, மருத்துவரின் ஆலோசனையுடன் உங்களுக்கு எந்த உணவு சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப டயர்ட்டை பின்பற்றுங்கள்.

கால்சியம்: கால்சியம் என்பது எலும்பு வலிமையாகப் பயன்படும். ஆனால் எடை குறைக்க இந்த கால்சியமும் நமக்குப் பயன்படும். குறிப்பாகப் பெண்களுக்கு கால்சியம் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முடிந்தவரை உணவில் கால்சியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.மது குடிக்கக் கூடாது: அடுத்து மது எடுத்துக் கொள்வதை முடிந்தால் முழுமையாக நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால் பெருமளவு குறைந்துவிடுங்கள். மது குடிப்பது ஒருபோதும் நல்ல யோசனையல்ல.. குறிப்பாக 30 வயதைக் கடந்த பிறகு இதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மது உடல் எடை குறைப்பைத் தாமதப்படுத்துவது மட்டுமின்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *