குண்டு குண்டு உடல்.. குறைய “சிறு குறிஞ்சான்”.. நீரிழிவு நோயாளியின் வரப்பிரசாதம் சிறுகுறிஞ்சான் பொடி

மூலிகை: இந்த மூலிகையில் உள்ள ஜிம்னிமிக் அமிலமானது, சர்க்கரையை அடக்க செய்கிறதாம். இந்த மூலிகையை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இனிப்பு மீதான ஆர்வத்தை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளை குறைப்பதுடன், நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்க இந்த சிறுகுறிஞ்சான் உதவுவது உறுதியாகி உள்ளது.

வெறுமனே இந்த இலையை மென்று தின்னலாம். அல்லது டீ போட்டும் குடிக்கலாம்.. கடைகளில் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.. அல்லது இலை தூள் வடிவில் உட்கொள்ளலாம். உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த மாத்திரையை சாப்பிட்டால் போதும்.. 3 முதல் 5 கிராம் வரை மட்டுமே எடுத்து கொள்ளவேண்டுமாம்.

கசாயம்: அல்லது கசாயமாக காய்ச்சி சாப்பிடலாம். அல்லது சிறுகுறிஞ்சான் இலைகளுடன் சமஅளவு நாவல் கொட்டைகளை எடுத்து, இரண்டையுமே தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, அதற்கு பிறகு ஒன்றாக கலந்துவைத்து கொள்ளவேண்டும்.. இதில், 1 ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து 40 நாட்களுக்கு குடித்து வந்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமாம்பக்கவிளைவுகளையும் இந்த சிறுகுறிஞ்சான் மூலிகை உண்டாக்கக்கூடியது.. தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல் ஏற்படலாம்.. அல்லது இன்சுலின் போடும்போது, இதையும் சேர்த்து சாப்பிட்டால் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். அதனால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல், இந்த சிறுகுறிஞ்சானை உட்கொள்ளவே கூடாது.

சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல் உடல் சூடு உடையவர்கள், இந்த சிறுகுறிஞ்சானை சூப் போல வைத்து குடிக்கலாம்.. அல்லது கசாயமாக வைத்து குடிக்கலாம். இதனால் உடலிலுள்ள உஷ்ணம் நீங்கிவிடும். அதேபோல, நிறைய காபி, டீ குடிப்பவர்களுக்கு பித்தம் உடலில் சேர்ந்துவிடும்.. பித்த உடம்புக்காரர்களுக்கும் சிறுகுறிஞ்சான் இலைகள் உதவுகின்றன.. இந்த காயவைத்து, தூளாக்கி, சுடுநீரில் கலந்து குடித்தால், உடலிலுள்ள பித்தம் தணிந்துவிடும். சிறுகுறிஞ்சான் இலை பொடியை, பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குறைபாடுகள் விலகிவிடும்.அதேபோல, நிறைய காபி, டீ குடிப்பவர்களுக்கு பித்தம் உடலில் சேர்ந்துவிடும்.. பித்த உடம்புக்காரர்களுக்கும் சிறுகுறிஞ்சான் இலைகள் உதவுகின்றன.. இதை காயவைத்து, தூளாக்கி, சுடுநீரில் கலந்து குடித்தால், உடலிலுள்ள பித்தம் தணிந்துவிடும். சிறுகுறிஞ்சான் இலை பொடியை, பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குறைபாடுகள் விலகிவிடும்.

உடல் பருமன்: உடல் பருமனை குறைக்கக்கூடிய தன்மை இந்த சிறுகுறிஞ்சான் இலைகளுக்கு இருக்கிறதாம்.. அதனால், இந்த இலையின் பொடியில் டீ போல தயாரித்து குடிக்கலாம்.. கல்லீரலை பலப்படுத்தும் சக்தி இந்த சிறுகுறிஞ்சானுக்கு உண்டு.. அதனால்தான், மஞ்சள் காமாலை சிகிச்சையில் இந்த இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கிட்னியில் கல் இருந்தாலும், அதை இந்த சிறுகுறிஞ்சான் சாறு வெளியேற்றிவிடும்.

கடுமையான காய்ச்சல் என்றால், இந்த சிறுகுறிஞ்சான் இலை கைகொடுக்கும்.. இந்த இலைகளை கழுவி சுத்தம் செய்து, அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அரைத்த விழுதையும் கொட்டி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு, 2 ஸ்பூன் மட்டும் குடித்து வந்தால் காய்ச்சல் குறைந்துவிடுமாம். இந்த சிறுகுறிஞ்சான் செடியின் வேர்கள், சளி, இருமலுக்கு மிகவும் நல்லது.

மிகவும் முக்கியம்: நன்மைகள் பல தந்தாலும், பக்கவிளைவுகளையும், சிலருக்கு இதுபோன்ற மூலிகைகள் உண்டாக்கிவிடும் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் உள்ளுக்குள் மருந்தாக எடுக்கவே கூடாது.மிகவும் முக்கியம்: நன்மைகள் பல தந்தாலும், பக்கவிளைவுகளையும், சிலருக்கு இதுபோன்ற மூலிகைகள் உண்டாக்கிவிடும் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் உள்ளுக்குள் மருந்தாக எடுக்கவே கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *