‘கனகா என்னை ஏமாற்றிவிட்டார்’..!! ‘அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சு’..!! குட்டி பத்மினி குமுறல்..!!
பழம்பெரும் நடிகை, தேவிகாவின் ஒரே மகளான கனகா, திரையுலகில் ஒரு பாடகியாக முயன்ற நிலையில், அவரின் அழகு திரைப்படங்களில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று தந்தது.
இவர், கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே, திரையரங்குகளில் சுமார் 250 நாட்கள் ஓடியது மட்டும் இன்றி, ராமராஜன் – கனகா கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.
தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார் கனகா. இவர், முன்னணி நடிகையாக இருக்கும் போதே… அவரின் தாயார் தேவிகா இறந்த நிலையில், அது இவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதை தொடர்ந்து தன்னுடைய தந்தை தேவதாஸுடன் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் காதல் தோல்வி போன்றவை, கனகாவை தனிமைப்படுத்தியது.
பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த கனகா, ஒரு உதவியாளர் துணையுடன் பாழடைந்த நிலையில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து பேசியது குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் கனகாவுடன் எடுத்து கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து குட்டி பத்மினி தெரிவிக்கையில், “கனகா மிகவும் நலமாக நல்ல மனநிலையுடன் உள்ளார். தன்னுடைய தந்தையுடன் இருந்த சொத்து பிரச்சனைகள் தீர்த்து விட்டதாக என்னிடம் தெரிவித்தார். நான் அவரை இந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு அபார்ட்மெண்டில் குடியேற சொன்னேன். அதே போல், வெளிநாடுகளுக்கு சென்று வரும் படி அறிவுறுத்தினேன் என கூறினார்.
மேலும், நான் அவரிடம் ரசிகர்கள் பற்றியும், பேட்டி ஒன்றும் கேட்டுள்ளேன் அவர் கண்டிப்பாக தருகிறேன் என சொன்னார். விரைவில் அவருடன் எடுக்கும் பேட்டியை வெளியிடுவேன் என தெரிவித்தார். குட்டி பத்மினி இந்த தகவலை கூறி இரண்டு மாதம் ஆன பின்னரும் கனகாவுடன் எடுத்த பேட்டியை வெளியிடவில்லை. எனவே, ரசிகர்கள் தொடர்ந்து இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், “கனகா தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அன்று நான் சந்தித்து பேசும் போது ஒன்னு கூறினார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள போன் செய்தால், எடுக்க மாட்டேங்கிறார். மெசேஜ் செய்தாலும் ரெஸ்பாண்ட் கிடையாது. அன்று அவரை சந்தித்த போது கூட அவர் என்னை வீட்டிற்கு வரச்சொல்லவில்லை. யாரையும் நம்ப அவர் தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அதே போல் நம்பி ஏமார்ந்து விடுவோம் என்கிற பயமும் அவருக்கு இருப்பதாக குட்டி பத்மினி கூறியுள்ளார். மேலும், அன்னைக்கு ஒன்று பேசிவிட்டு இப்போது கனகா அந்தர் பல்டி அடித்த விஷயத்தை மன குமுறலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் குட்டி பத்மினி.