ஹீரோவாக மாறிய கோபி… பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா?
பாக்கியாவுக்கு வரும் சிக்கலை கோபி தீர்த்து வைப்பதாக அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சாதாரண இல்லத்தரசி சந்திக்கும் சவால்களை அடிப்படையாக வைத்து வெளியான சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வரும் இந்த சீரியலில் பாக்யாவாக சுசித்ரா, ராதிகாவாக ரேஷ்மா, கோபியாக சதீஷ் நடித்து வருகின்றனர்
.தற்போது, சீரியலில் அம்ரிதாவை அழைத்துச் செல்ல பாக்கியா வீட்டிற்கு வருகிறார் கணேஷ். அப்போது எழும் சிக்கலான சூழ்நிலையை லாவகமாக சமாளிக்கிறார் கோபி.
இந்தநிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டைனிங் டேபிளில் கோபியும் ராதிகாவும் அமர்ந்திருக்க அங்கு வரும் பாக்கியா, இன்னைக்கு எல்லா விஷயமும் நடக்கும்போது, என்ன பண்றதுனு தெரியாம திணறி போயிருந்தேன். ஆனா நீங்க மட்டும் பேசலனா என்ன வேணாலும் நடந்திருக்கும், தேங்க்ஸ் என்று சொல்கிறார்
.இதைக்கேட்டு எமோஷ்னல் ஆகும் கோபி, இப்படி ஒரு பிரச்சனையை யாரும் ஃபேஸ் பண்ணிருக்க மாட்டாங்க பாக்கியா. நம்ம பையன நினைச்சு நீ வருத்தப்பட வேண்டும். அம்ரிதா நம்ம பையன விட்டு போக மாட்டா, எது வந்தாலும் நாம பார்த்துக்கலாம், நீ தைரியமா இரு என ஆறுதல் கூறுகிறார். இதைக்கேட்டு பாக்கியா எமோஷ்னலாகிறார். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சீரியலில் வில்லன் போல் காட்டப்பட்டு வரும் கோபி தற்போது நல்லவனாக காட்டப்படுவதால் சீரியல் விரைவில் முடியப்போகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.