கதாநாயகன் கட்ட அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீங்க; டி ஆர் ராஜேந்தர்

கன்னியாகுமரியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் அருட் சகோதரி அர்ச்சனா தலைமையில், கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர், கலப்பை அமைப்பின் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர், ” மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். நிவாரண பொருட்கள் வழங்கிய போது கூட்ட நெரிசல் காரணமாக எனக்கு மயக்கம் ஏற்பட்டது. நான் நன்றாக உள்ளேன். எனது உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ரசிகர்களிடம் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன், கதாநாயகனின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்யாதீர்கள். அந்தப் பாலை பசியால் இருக்கும் குழந்தைக்கு கொடுங்கள்” என்றார்

.ரசிகர்களிடம் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன், கதாநாயகனின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்யாதீர்கள். அந்தப் பாலை பசியால் இருக்கும் குழந்தைக்கு கொடுங்கள்” என்றார்.

தொடர்ந்து, “தமிழகத்தின் தென்கோடி முனையை நினை, கடலில் காலை நனை” என தனது பானியிலே பேச்சை நிறைவு செய்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *