New Year 2024 : புத்தாண்டு கொண்டாட்ட வரலாறு என்ன தெரியுமா?

கிபி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மெசபடோமியாவில் உள்ள பாபிலோனியாவில், புத்தாண்டு மார்ச் மாதத்தின் மத்தியில் புதிய நிலவு வரும் ஒரு சமமான இரவு மற்றும் பகல் வரும் ஈக்னாக்ஸ் என்று அழைக்கப்படும் நாளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக தரவுகள் உள்ளன. அசிரியாவில் புதிய நிலவு நாள் வரும் செப்டம்பரின் மத்தியில் கொண்டாடப்பட்டது. எகிப்தியர்கள், பெர்சியர்களுக்கு ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியன்று வரும் சமநாளில் புத்தாண்டு வரும். ஆரம்ப கால கிரேக்கர்கள், குளிர்காலத்தில் டிசம்பர் 21ம் தேதி புத்தாண்டு கொண்டாடினார்கள். ரோமன் காலண்டரின்படி, மார்ச் 1ம் தேதி ஆண்டு துவங்கியது.

கிபி 153ம் ஆண்டுக்குப்பின்னர்தான் அதிகாரப்பூர்வமான தேதி ஜனவரி 1ம் தேதி கொண்டாட்டப்பட்டது. அதுவே கிபி 46ம் ஆண்டு ஜீலியன் காலண்டரிலும் தெடர்ந்தது.

இடைக்காலத்தில் மார்ச் 25ம் தேதி அனுன்சியேசனின் ஃபீஸ்ட் கொண்டாடும் வகையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஆங்லோ சாக்ஸான் இங்கிலாந்தில் டிசம்பர் 25ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

வில்லியம் தி கான்குயரர், ஜனவரி 1ம் தேதி ஆண்டு துவங்கும் என அறிவித்தார். இங்கிலாந்து பின்னர் சேர்ந்து கொண்டது, கிறிஸ்டென்டத்தில் எஞ்சிய பகுதிகள் மார்ச் 25ஐ தேர்ந்தெடுத்துக்கொண்டது. கிரிகோரியன் காலண்டர் ஜனவரி 1ஐ புத்தாண்டாக அங்கீகரித்தது

வில்லியம் தி கான்குயரர், ஜனவரி 1ம் தேதி ஆண்டு துவங்கும் என அறிவித்தார். இங்கிலாந்து பின்னர் சேர்ந்து கொண்டது, கிறிஸ்டென்டத்தில் எஞ்சிய பகுதிகள் மார்ச் 25ஐ தேர்ந்தெடுத்துக்கொண்டது. கிரிகோரியன் காலண்டர் ஜனவரி 1ஐ புத்தாண்டாக அங்கீகரித்ததுபெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றின. ஸ்காட்லாண்ட் 1660 முதலும், ஜெர்மனியும், டென்மார்க்கும் 1700லும், இங்கிலாந்து 1752லும், ரஷ்யாவில் 1918ல் இருந்தும் பின்பற்ற துவங்கின.

லூனார் காலண்டரை பயன்படுத்தும் கலாச்சாரங்களும், மதங்களும் ஜனவரி 1ஐ தவிர மற்ற நாட்களில் கொண்டாடியது. யூத காலண்டரில் ஆண்டு ரோஷ் ஹஷானா அன்று ஆண்டு துவங்கியது. திசிரி மாதத்தின் முதல் நாள் செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 5க்குள் வரும். அந்த நாளில் கொண்டாடியது.

முஸ்லிம் காலண்டரில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 354 நாட்கள் மட்டுமே இருக்கும். புத்தாண்டு மொஹரம் மாதத்தில் பிறக்கும். சீன புத்தாண்டு, ஜனவரியின் இறுதியில் அல்லது பிப்ரவரியின் துவக்கத்தில் வரும். மற்ற ஆசிய கலாச்சாரங்களில், ஆண்டில் பல்வேறு நேரங்களில் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில், குளிர்காலத்தில் புத்தாண்டு

கொண்டாடப்படுகிறது. திபெத்தியர்கள் பிப்ரவரியில் கொண்டாடுகிறார்கள். மார்ச் அல்லது ஏப்ரலில் தாய்லாந்தில் கொண்டாப்படுகிறது. ஜப்பானில் 1 முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் புத்தாண்டு மகிழ்ச்சியுடனும், பரிசுகள் பரிமாறியும், நல்ல உணவு உண்டும் கொண்டாடப்படுகிறது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *