மங்கி ஃபாரெஸ்ட், பீச் ரெசார்ட், ஃபேமிலி: ஷ்ருதிகா அர்ஜூன் ‘பாலி’ வீடியோஸ்
ஷ்ருதிகா அர்ஜூன் இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக தன் குடும்பத்துடன் இந்தோனேஷியாவின் பாலி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மங்கி ஃபாரெஸ்ட், பாலி ஸ்விங், பீச் ரெசார்ட் என பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்தோனேசியாவின் பாரம்பரிம் நிறைந்த சிறு தீவுப் பகுதி பாலி. இது ஒரு சிறிய, பண்பாடுகள் நிறைந்த, மக்கள் வாழும் தீவு. பாலித்தீவு மக்கள் கலையம்சம் நிரம்பிய வாழ்க்கை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்
ஜாகர்த்தா தீவுக்கு அருகில் இருப்பதால் அங்கு செல்பவர்கள் பாலித்தீவுக்கும் செல்கின்றனர். பாலி இன்றும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பும் கடற்கரைகளும் தான். இங்கு உள்ளூர் பயணத்துக்குச் சாலை வழிகள் மட்டுமே உண்டு.
பாலி முழுவதுமே சுற்றுலா பயணிகளுக்கானது. இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. பாலியின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் நிறைந்த புரி லுகிசான் அருங்காட்சியகம், உபுட் மன்னர் குடும்பத்தின் அதிகார அரண்மனை, அதன் அருகில் பாரம்பரிய ஆர்ட் மார்க்கெட்- இங்கு கைவினைப் பொருட்கள் உட்பட பலவும் கிடைக்கின்றன.
186 வகை மரங்கள் கொண்ட குரங்கு காடு, யானை சவாரி, எரிமலைகள், அருவிகள், பைக் சாகம், கடலில் ‘ஸ்னார்கலிங்’ எனப்படும் சாகசம் என இன்னும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன. ஏரிகள், புத்த கோயில்கள், மாலையில் சூரியன் அந்தி சாயும் அழகு, பாரம்பரிய பாலி நடனங்கள், வண்ணத்துப்பூச்சி பூங்கா இப்படி பல வகையான இடங்கள் இங்கு நீங்கள் கண்டு ரசிக்க உள்ளன.
தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பாலித் தீவைப் பார்க்க வேண்டும்.