மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியும்.. அந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.. முன்னாள் வீரர் கருத்து!

மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலம் மும்பை அணிக்கு சிறந்ததாக அமைந்தது. கடைசியாக 2020ஆம் ஆண்டு கோப்பையை வென்ற மும்பை அணி, அதன்பின் 3 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சீசனில் பிளே ஆஃப் வரை முன்னேறியும், குஜராத அணியிடம் மோசமாக தோல்வியடைந்து வெளியேறியது.

இதற்கு மும்பை அணியில் இருந்து பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விலகியதே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணியிடம் இருந்து மும்பை அணி டிரேடிட் முறையில் வாங்கியுள்ளது. அதேபோல் மினி ஏலத்திலும் ஜெரால்ட் கோட்சியே, மதுஷங்கா, துஷாரா, ஸ்ரேயாஸ் கோபால், நமன் தார் உள்ளிட்ட வீரர்களை வாங்கியுள்ளது.

மும்பை அணிக்கு சுழற்பந்துவீச்சாளராக பியூஷ் சாவ்லா மற்றும் கார்த்திகேயே மட்டுமே செயல்பட்டு வந்ததால், அவர்களுடன் ஸ்ரேயாஸ் கோபாலும் இணைந்துள்ளார். இதனால் மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டின் பலமும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஏலத்திற்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியாவை வாங்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களில் ஸ்ரேயாஸ் கோபாலும் இணைந்துள்ளார். மும்பை அணியின் ஸ்பின் அட்டாக் சிறிது பலம் குறைவாக இருந்தாலும், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலே போதும் என்ற நிலை உள்ளது.

அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி தங்களது வீரர்களுக்குள் சுமூகமான சூழலை உருவாக்கினாலே போதும் என்று நினைக்கிறேன். நிச்சயம் அடுத்த கோப்பையை வெல்லும் அணியை உருவாக்கிவிட்டார்கள். கேப்டன்சி மாற்றம், கடந்த 2 ஆண்டுகளாக அடைந்த தோல்வி உள்ளிட்டவை தான் பிரச்சனை. அதனை வெற்றிகரமாக தொடங்கினாலே கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *