பொன்னியின் செல்வன் பார்க்கும்போது அது மாதிரி இல்லை – இளையராஜா விமர்சனம்

பொன்னியின் செல்வன் படம் பார்க்கும்போது அது மாதிரியே இல்லை என்றும் ஏனென்றால், பொன்னியின் செல்வன் நாவலைப் படித்து படித்து மனதில் பதிந்துவிட்டது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.பொன்னியின் செல்வன் படம் பார்க்கும்போது அது மாதிரியே இல்லை என்றும் ஏனென்றால், பொன்னியின் செல்வன் நாவலைப் படித்து படித்து மனதில் பதிந்துவிட்டது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகத்தை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இசை ஞானி இளையராஜா தனது இசையால் ஏகபோகமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இசையில் கடும் போட்டி கொடுக்கிறார்.

தமிழ் மொழியின் ஆழம் அறிந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா என்று உறுதியாகக் கூறலாம். அவருக்கு பின்னால் இசையமைக்க வந்த இசையமைப்பாளர்கள் அவரைத் தாண்டி முன்னால் ஓடியதாகத் தோன்றினாலும், அவர்கள் ஓய்ந்து நிற்கும்போது, இளையராஜா அதே படைப்பூக்கத்துடன் புதுமையுடன் அதே வேகத்துடன் அனைவரையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறார்.

தமிழ் மக்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா தருணங்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இளையராஜா தமிழ் மக்களின் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

இத்தகைய புகழுக்குரிய இளையராஜா தெரிவிக்கும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, பொன்னியின் செல்வன் படம் பார்க்கும்போது அது மாதிரியே தெரியவில்லை. குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். ஏனென்றால், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பல முறை படித்திருக்கிறேன். எத்தனை முறை படித்திருக்கிறேன், அது அப்படியே மனதில் பதித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல, இளம் வயதில், இளையராஜா, பாரதிராஜா, பாஸ்கர் எல்லாம் நூலகத்திற்கு சென்று பொன்னியின் செல்வன் நாவல் படிக்கும்போது செய்த சேட்டைகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும், கல்கியின் எழுத்துகள்தான் தனக்கு கற்பனையைத் தூண்டி விட்டதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *