BiggBoss7: மாயா-பூர்ணிமா-அர்ச்சனா கூட்டாக போட்ட குத்தாட்டம்: களைகட்டிய புத்தாண்டு
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 92ஆவது நாள் குறித்த புரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. விக்ரம் சென்ற பின்னர், ரவீனாவும் நிக்சனும் அடுத்தடுத்து டபுள் எவிக்சனில் வெளியேறினர்.
இத்தகைய சூழ்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 92ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மணியும் விஜய் வர்மாவும் வெளியேறிவிடுவர் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் விசித்ரா பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபட்டபோது தினேஷை மறைமுகமாக சாடி புலம்புகிறார். அதில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் வகையில், ‘ இவங்களோட குடுத்தனம் நடத்துறதுக்கு, தனியாவே குடுத்தனம் பண்ணிடலாம். திரும்ப வந்திடாதம்மா தாயே’ என ரச்சிதாவிடம் பேசுவதுபோல் பேசுகிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதனால் அவரும் விரைவில் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க புத்தாண்டு கொண்டாட்டத்தையும் பிக்பாஸ் இல்லம் விட்டுவைக்கவில்லை. இதுதொடர்பாக வெளியான 92ஆவது நாளுக்கான பிக்பாஸ் சீசன் 7க்கு உண்டான புரோமோவில் புத்தாண்டு கொண்டாட்டம், போட்டியாளர்களின் ஆட்டம்பாட்டத்துடன் தொடங்கியது. அவர்களுக்கு சுவையான அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
அப்போது பிக்பாஸ் இல்லத்தோழர்கள் கவலையை மறந்து ஆடிப்பாடி குதூகலித்து உணவை ஒரு ருசி பார்த்தனர்.