எங்களுக்கு இருக்கும் எமக்கண்டமே அது ஒன்று தான்..! அதை சரி செய்ய முயற்சித்தோம்.. ஆர்சிபி அணியை ரசிகர்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற டுபிளசிஸ்

ஐபிஎல் மினி ஏலத்தில் வழக்கம் போல் ஆர் சி பி சொதப்புவிட்டதாக அந்த அணியை ரசிகர்கள் கடுமையாக குற்றம் சாட்சி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தை திறந்தாலே ஆர்சிபி செய்த காமெடி தான் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏலத்திற்கு முன்பு தங்களிடம் இருந்த முன்னணி பவுலர்களை விடுவித்த ஆர் சி பி அணி இந்த ஏலத்தில் அல்சாரி ஜோசப் என்ற வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதேபோன்று நியூசிலாந்து வீரர் லோகி ஃபிகர்சனுக்கு இரண்டு கோடியும் டாம் கரனுக்கு ஒன்றரை கோடி ரூபாயும் rcb அணி கொடுத்திருக்கிறது.

இதேபோன்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்
யாஷ் தாக்கூருக்கும் 5 கோடி ரூபாய் ஆர்சிபி அணி கொடுத்திருக்கிறது. இந்த பவுலர்களை வைத்து சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி அடி வாங்க போகிறது என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆர் சி பி அணியின் வியூகம் குறித்து பேசி உள்ள அந்த அணி கேப்டன் டுப்ளசிஸ் கடந்த சீசனின் போது நாங்கள் உள்ளூர் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். ஏனெனில் கடந்த சீசனில் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நாங்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றோம் தற்போது சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் இந்த ஏலத்தில் நாங்கள் முயற்சி செய்தோம். இந்த மினி ஏலத்தில் எவ்வாறு அணியை கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பணிகளை மேற்கொண்டோம்.

உள்ளூர் மைதானத்தில் நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்களை தேடி நாங்கள் ஏலத்தை அணுகினோம். ஆர் சி பி அணி குறித்து தான் பல மணி நேரம் நான் கடந்த இரண்டு மாதமாக பேசி இருக்கிறேன். அணியை பலமாக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதலில் யோசிக்க வேண்டும்.

அனைத்து பிரிவும் சரியாக இருக்கிறதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த ஏலத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன் என்று டுப்ளசிஸ் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *