Triptii Dimri: அனிமல் பட நெருக்கமான காட்சியின் போது ரன்பீர் கபூர் சொன்ன விஷயம் – டிரிபி டிமிரி பகிர்ந்த ரகசியம்
படப்பிடிப்பில் உங்களையும், உங்களது விருப்பத்தையும் மதிக்கும் சூழல் இருப்பது மிகவும் அவசியம். அதுவே உங்களிடம் சிறப்பாந நடிப்பை வெளிப்படுத்தும் என்று நடிகை டிரிப்டி டிமிரி கூறியுள்ளார்.
பாலிவுட், டோலிவிட், கோலிவுட் என பிஸியான நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடப்படுகிறார். அவர் கதாநாயகியாக நடித்த அனிமல் என்ற படத்தில் சிறிய வேடத்தில் தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டதுடன், ராஷ்மிகாவின் நேஷனல் க்ரஷ் என்ற அந்தஸ்தை தன் வசம் ஆக்கி கொண்டவர் ட்ரிப்டி டிமிரி.
இவரது அழகிலும், நடிப்பிலும் சொக்கி போன ரசிகர்கள் ட்ரிப்டியை புதிய நேஷனல் க்ரஷ் என்று அழைக்க தொடங்கியுள்ளனர். கடந்த டிசம்பரில் ரன்பீர் கபூர், ராஷ்மிக மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் திருப்புமுனை தரும் கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார் ட்ரிப்டி டிமிரி.
படத்தில் ரன்பிருடனான லிப் லாக், படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டியிருக்கும் ட்ரிப்டி, மேலாடையின்றி அரைநிர்வணாமாக நடித்திருப்பார். சென்சார் கத்திரியிலிருந்து எப்படியோ தப்பித்த இந்த காட்சி ரசிகர்களை சுடேற்றியுள்ளது. அத்துடன் படத்தின் ரன்பீருடனான ரொமான்ஸ் காட்சியிலும் பட்டையை கிளப்பியிருப்பார் ட்ரிப்டி.
இதையடுத்து ரன்பீருடனான நெருக்கமான காட்சியில் எந்த தயக்கமும் இன்றி நடித்ததாக ட்ரிப்டி டிம்ரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரபல ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “உங்களுடன் நடிக்கும் சக நடிகரின் ஒத்துழைப்பு எப்போதுமே உதவிகரமாக இருக்கும். குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது நம்மை வசதியாக உணர வைப்பதுடன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்த உதவும்.
படுக்கையறை காட்சி படமாக்கும்போது படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி, நடிகர் ரன்பீர் கபீர், ஒளிப்பதிவாளர் ஆகியோர், எப்போது அசெளகரியாமாக உணர்ந்தாலும் உடனடியாக தெரிவிக்குமாறு கூறினார்கள்.
உங்களையும், உங்களது விருப்பத்தையும் மதிக்கும் சூழல் இருப்பது மிகவும் அவசியம். மற்ற காட்சிகளை போல் தான் எளிதாகவே இந்த காட்சியும் படமாக்கப்பட்டது. தனி மெனக்கெடல் எதுவும் செய்யவில்லை. எனது செளகரியம் பற்றி நன்கு அக்கறை செலுத்தப்பட்டது. எனவே கதைக்கு தேவையான அந்த காட்சி சிறப்பாக வந்தது.” என்றார்.