Yogi Babu: புத்தாண்டு கொண்டாட்டம்! திருத்தணி முருகன் கோயிலில் யோகி பாபு சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இதையடுத்து இவர் 2024 புத்தாண்டை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வரவேற்றுள்ளார்.

ஹரோகரா என முழங்க இன்று அதிகாலையில் சாமி தரிசனம் செய்த யோகி பாபுவுக்கு திருத்தணி கோயில் நிர்வாகம் சார்பில் மாலை, சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. யோகி பாபு கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த பகர்தர்கள் பலரும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், செஃல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இதன் பின்னர் ரசிகர்களுடன் தனியாக நின்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கோயிலுக்கு வருகை புரிந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார் நடிகர் யோகி பாபு.

திருத்தணி முருகன் கோயிலுக்கு அடிக்கடி சாமி தரிசனம் செய்து வரும் யோகி பாபு, 2024ஆம் ஆண்டை அந்த கோயிலில் வைத்தே தொடங்கியுள்ளார். யோகி பாபுவின் திருமணமும் கடந்த 2020இல் திருத்தணி முருகன் கோயிலில் வைத்து தான் நடைபெற்றது.

கடந்த 2023இல் யோகி பாபு நடிப்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. பொம்மை நாயகி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். இது அவரது 175வது படமாக அமைந்தது.

இந்த ஆண்டில் யோகி பாபு நடிப்பில் அயலான், அரண்மனை 4, கங்குவா, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், அந்தகன் போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் வரவுள்ளன. இதில் அயலான் திரைப்படம் பெங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

சிம்பு தேவன் இயக்கத்தில் போட் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் யோகி பாபு. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக படம் உருவாகியுள்ளது. இதன் டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பையும் பெற்றுள்ளது.

அத்துடன், 2024ஆம் ஆண்டில் மலையாள சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார் யோகி பாபு. ஏற்கனவே தெலுங்கு, இந்தி சினிமாக்களில் நடித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *