ஓவர் பில்டப், அடங்கிப்போன சலார் வசூல்.. உலகளவில் இதுவரை எவ்வளவு தெரியுமா
கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சலார். தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் முதல் முறையாக பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்திருந்தனர். கே.ஜி.எப் வெற்றியை தொடர்ந்து சலார் வெளிவருவதால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இப்படம் அதை பூர்த்தி செய்யவில்லை. பிரபாஸ் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அது மட்டும் தான் படத்தில் இருந்தது. கதை என்று எதாவது படத்தில் இருந்ததா என்றால் அது கேள்விக்குறி தான்.
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் படுமோசான விமர்சனங்களையும், வசூலையும் சந்தித்துள்ளது.
வசூல் விவரம்
முதல் மூன்று நாட்கள் வசூலில் பட்டையை கிளப்பிய சலார், அதற்குப்பின் பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்க துவங்கியது. இந்நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 550 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
ஓவர் பில்டப்பில் வெளிவந்த இப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்பது போல் பேசப்பட்டது. ஆனால், மோசமான விமர்சனங்கள் காரணமாக தற்போது இந்த நிலைமையில் உள்ளது.